Thursday, July 9, 2020

சருகுமான் (சருகுவலையர்) - வலையர்களின் இயற்கை அறிவியல் மரபு அறிவு


புள்ளி எலிமான்' என்றொரு உயிரினம் பற்றிச் சமீபத்தில் பல செய்திகள் வெளிவந்தன. இந்தப் பெயருடன் ஓர் உயிரினம், நம் பகுதிகளில் இருக்கிறதா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. தேடிப் பார்த்ததில், ஆங்கிலத்தில் ஸ்பாட்டட் மவுஸ்டீர் என்று அழைக்கப்படுவதால், ‘புள்ளி எலிமான்‘ என அப்படியே மொழிபெயர்த்துவிட்டார்கள்.

சங்கக் கால உயிரினங்கள் பற்றி பல நூல்களை எழுதியுள்ள பி.எல்.சாமி, தன்னுடைய கட்டுரை ஒன்றில் இந்த உயிரினத்தைப் புள்ளி எலிமான் எனக் குறிப்பிட்டுள்ளார். என்றாலும், அது பழைய பதிவு. நம் மரபையே அறியாமல், ஆங்கிலத்தில் உள்ளதை அர்த்தம் புரியாமல் மொழிபெயர்ப்பதால் ஏற்படும் பிரச்சினை இதுவென்று, சூழலியல் அறிஞர் சு. தியடோர் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்ந்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சருகு மான்

இந்த உயிரினத்தின் தமிழ்ப் பெயர் ‘சருகு' மான் என்னும் சொல், தமிழில் இரட்டைக்குளம்பிகளுக்கான பொதுச்சொல்; அதனால் இந்த உயிரினம் மக்கள் வழக்கில் சருகுமான் எனப்பட்டது. இலைச்சருகுகள் இடையே மறைந்து வாழும் தன்மையைக் கொண்டிருப்பதால், இதற்குச் சருகு என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

இக்கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருந்தாலும் உயிரினங்களுக்குக் காரணப் பெயரைச் சூட்டுவது தமிழ் மரபன்று; ஒன்றிலிருந்து பிரிந்து, இயல்புநிலை திரிந்து பொய்யாக உள்ளவற்றைத்தான் ‘சருகு' என்று அழைப்பது தமிழ் சொல் மரபு (இலைச்சருகு, வெங்காயச்சருகு என்பதைப் போல). மெல்லியதான, ஒடியக்கூடிய தன்மையைச் சுட்டவும் சருகு என்ற சொல் பயன்பட்டிருக்கிறது.

மாயம் காட்டும்

அதேநேரம் இந்த உயிரினம் இரட்டைக்குளம்புகளுடன் பார்க்க மான்களைப் போலிருந்தாலும், இந்த உயிரினம் மான் வகையைச் சேர்ந்தது அல்ல; இரட்டைக்குளம்பிகளான இயங்குதிணை உயிரினத்திலிருந்து பிரிந்து, திரிந்துபோய்ச் சரியாகப் பரிணாமவியல் மாற்றம் அடையாத உயிரினம் இது. எனவே தோற்றத்தில் மானைப் போலிருந்தாலும், உயிரின வகைப்படி இது மான் அல்ல. மானைப் போன்ற சருகு என்பதால், சருகுமான் எனப்பட்டது.

இந்தப் பொய்யான தன்மையும் காய்ந்த இலைதழைகளினூடே தன்னுருவை மறைத்து மாயம் காட்டித் திரிவதாலும் இதற்குப் பொய்மான், மாயமான் என்னும் பெயர்களும் உண்டு. சருகு என்னும் இடுகுறிப் பெயரின் தன்மையைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், பொய்மான் என்னும் காரணப்பெயராக மாற்றவேண்டிய அவசியம் தமிழ் மரபில் ஏற்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் சருகுமான் பொய்மானாயிற்று. மாரீசன் பொய்மானாக வேடமெடுத்து ஓடினான் என்றால், சருகுமானாக வேடமெடுத்து ஓடினான் என்பதுதான் பொருள். பொய்யான மான் என்று பொருள் காண்பது, பொருள்மயக்கம். கல்கி எழுதிய ‘பொய்மான் கரடு' என்னும் புதினம் நினைவுக்கு வரலாம்.

மறைந்த இயற்கை அறிவு

கடந்த ஓரிரு ஆண்டு கால நாளிதழ்களைப் புரட்டினால் திண்டுக்கல், வில்லிப்புத்தூர், கடையநல்லூர், களக்காடு, தர்மபுரி, நீலகிரி ஆகிய ஊர்ப்புறங்களில் சருகுமான்கள் வேட்டையாடப்பட்ட செய்திகள் வந்துள்ளன. திண்டுக்கல், நத்தம், சிறுமலைப் பகுதிகளில் இந்தச் சருகுமான்கள் இப்போதும் வேட்டையாடப்பட்டுவருகின்றன. சருகுமான்கள் வாழ்வதற்கேற்ற மலைகளும் கரடுகளும் இப்பகுதிகளில் இருப்பதால், இங்கு அவை அதிகமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், இப்பகுதியில் வசிக்கும் வேட்டுவச் சமூகமான வலையர் சாதியில், சருகுவலையர் என்னும் பெரும்பிரிவு உண்டு.

இந்த வேட்டுவச் சமூகத்தினர் சருகுமான்களைக் குலச்சின்னமாக வைத்திருந்ததால் சருகுவலையர் எனப்பட்டனர்; இதுபோன்ற குலச்சின்ன மரபு எல்லாச் சமூகங்களில் உண்டு. ஆனால், பிற்காலத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகள் அற்றுப்போன நிலையில், சருகுமான்களைப் பற்றிய அறிவை மதுரை, திண்டுக்கல் மாவட்ட மக்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். அப்போது, சருகுமான்களின் தோற்றத்தை வைத்து அவற்றைக் காட்டு எலிகள் எனக் கருதி, சருகுவலையர்களை எலிகளோடு தொடர்புபடுத்தினர். அதேநேரத்தில் தங்கள் வயல்களைப் பாழ்படுத்தும் எலிகளைப் பிடிக்க மட்டும், சருகுவலையர்களின் மரபுஅறிவைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இயற்கை பற்றிய அறிவைப் பெரும்பான்மை மக்கள் இழந்து வருவதன் அடையாளமே மேற் கண்டது போன்ற பெயர் குழப்பங்கள், வகைக் குழப்பங்கள். இயற்கை பற்றிய மரபு அறிவைப் பாதுகாக்க சருகுமான் போன்ற பெயர்களையும், அந்த உயிரினங்களையும், சருகுவலையர்களின் அறிவையும் ஒருங்கிணைந்து பாதுகாக்க வேண்டும்.

கட்டுரையாளர், தமிழ் ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: Writerchiththaanai@gmail.com

Tuesday, July 7, 2020

பாரிவள்ளல் வரலாறு - Paarivallal History

பறம்புநாட்டு மன்னர் "பாரிவள்ளல் முத்தரையர்" - (முல்லைக்கு தேர்கொடுத்த வள்ளல்).

King Paari Vallal

பறம்பு நாடு :


                    பறம்பு மலை என்ற பிரான்மலை  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது.

மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும். பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி ஆண்டு வாழ்ந்த மலையாகும்.

பிரான்மலை - பாரிமுத்தரையர் நாடு.

இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம்  எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.

 "ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்"  என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.



பாரிவள்ளல் வரலாறு : 


                 பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, பறநாடு  எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை  வேள்பாரி (பாரி வள்ளல்)  கி.பி 2 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டான். வேளிர் குல வலையோன் தலைவனாக விளங்கிய இவன் ஈகை குணத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய மாமன்னராகவும், தமிழ் வேந்தருள் தனித்தோர் புகழ் கொண்ட வேந்தராகவும் பாரி மன்னன் போற்றப்பட்டான்.  இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். முல்லை செடிக்கு தன் தேரை கொடுத்த கொடை வள்ளல்  என்ற புகழுக்கு சொந்தகாரர். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொல்வடை வழக்கில் இருந்து வருகிறது. 

வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாக பாரியை தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவர்.  அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழு கொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச் செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலை சிறந்தவராக போற்றப்படுகின்றார்.  

இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ் பெற்ற சுந்தரர் – ‘திருத்தொண்டத் தொகை’ என்ற புகழ் பெற்ற பதிகத்தைப் பாடியவர் – பாரியையே கொடைக்கு எல்லையாக சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்கத் தொகை நூலுள் பல உள்ளன.
பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள். பல காலம் முற்றுகை இட்டும் வெற்றி கிடைக்கவில்லை.
மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க் களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும். அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக் கேட்டார்கள்.
நாங்களும் பலக் காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரி கோட்டைக்குள் இருந்துக் கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக் கேட்டார்கள்.


கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது. வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும், கிழங்குகளும் உள்ளது. மேலும் மூங்கில் நெல் உள்ளது. அவற்றைக் கொண்டே உணவுத் தேவையை சமாளித்துக் கொள்ள முடியும். நீங்கள் ஆண்டுக் கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.
அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக் கேட்டதர்க்கு, போரில் அவரை வெல்ல முடியாது. ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தை கேட்டாலும் கொடுத்து விடுவார். அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப் பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக் கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக் காட்டினார் கபிலர். மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்து விட்டார். இப்போது இருப்பது இந்த மலையும், அரண்மனையும் மட்டுமே என்றார்.

ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப் பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி  அவரை மகிழ்வித்தார்கள்.
மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள், என்னிடம் இருப்பது எதைக் கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும், உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக் கேட்டாலும் எப்படி உயிரைக் கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக் கூடாது என்று வாளை எடுத்து வைத்து விட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.
இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப் பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாள்களை பாரி மீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.


பாரி இறக்கும் தருவாயில்  அவரது மகள்கள் அங்கவை,  சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை. நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இல்லை எனாது, கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.


பாரிவள்ளல் ஆண்டு கொண்டிருந்த பறம்பு நாடு எத்தகைய மக்களைப் பெற்றது, எத்தகைய செல்வத்தைப் பெற்றது? பாரி இறந்த பின் பாரியின் இரு பெண்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்த கபிலர், இப்புறநானூற்றுப் பாடல் வழி, தனது கலக்கத்தை கூறுமிடத்து, பறம்பு நாட்டின் செல்வத்தைப் பற்றிப் பாடுகிறார்.
 (புறம்: 113).


இப்பகுதியில் பாரியின் வம்சவழியாக வாழும் 'முத்தரையர் மக்கள்' தன் குழந்தைகளுக்கு பாரி, பரிதி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் தன்மரபு பெயர்கள் வைத்துவரும் பழக்கமும் காலங்காலமாக தொன்றுதொட்டு வருகிறது.




பாரி வலையர்
முல்லைக்கு தேர்தந்த மன்னர் பாரி வள்ளல்.

இருப்பினும் பாரி நாட்டின் உரிமையானவர்களாகவும் பாரின் வம்சவழியினராகவும் ஒரு பிரிவினரே உள்ளார்கள். பறம்பு மலையை சுற்றி முழுவதும் பாரியின் மக்களாக தமிழ் இன ஆதி போர்க்குடியான 'வலையர் சாதிய முத்தரையர்' சமுகத்தினரே பறம்புமலை சுற்றியும் பாரி நாடு பகுதியெங்கும் பெரும்பாண்மையாக நிறைந்து வாழ்கின்றனர்.

இவர்கள் தாங்களின் சாதிய அடையாள பட்டப்பெயராக பாரி நாட்டார், பறம்பு நாட்டார், பாரி வலையர், பரிதிவலையர், பாரி மூப்பர், மூப்பனார், பாரி, பறம்பன், பறம்பு, பிடாரன், மலையான், பாரி வலையன்  என பறம்புமலையையும், பாரியின் வம்சத்தை உணர்த்தும் வகையாகவும் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.


பாரி நாடு :


தென்னெல்லை - திருமோகூர் முதல் கீழ் மேலோடிய வைகையாற்றங்கரை - பறம்புக்குடி.
கிழக்கெல்லை - பறம்புக்குடி- காளையார் கோயில் - முத்து நாடு - அனுமந்தக் குடி- பறம்பு வயல்.
வடவெல்லை - பறம்பு வயல் - கானாடுகாத்தான், சோனாபட்டு - திருக்கோளக்குடி - பூலாங்குறிச்சி - இடையாற்றூர் குடுமியான் மலைப்புறம் - பறம்பூர்.
மேற்கெல்லை - பறம்பூர் - மருங்காபுரி - துவரங்குறிச்சி - நத்தம் மலைகளின் கிழக்குப் பகுதி - அழகர் மலைக் கிழக்குப் பகுதி - பறம்புக் கண்மாய் - திருமோகூர் போன்ற பகுதிவரை பறம்புமலையை தலைமையாக கொண்ட எல்லைகளாக பரவி நாடாண்ட பாரி மன்னரின் நாடாக இருந்ததை நம்மால் காணமுடிகிறது.



பாரிவேட்டை பாரம்பரியம் :

( பாரிவேட்டையும் வலையர் மக்களின் பாரம்பரியமும் ).


             பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை பாரம்பரியம் அரசமரபினரில் இப்போதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பறம்பு மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் முத்தரையர் சமூக மக்கள் இந்த வேட்டையை பாரம்பரிய மரபாக நடத்தி வருகின்றனா். மேலும் பிற பகுதி முத்தரையர் மக்களும் ராஜ வம்ச சடங்குகளாக நாகரீகத்துடன் வருடம் ஓர்முறை இந்த பாரிவேட்டை மற்றும் வேடுபறி நிகழ்வை கடைப்பிடிக்கின்றனர்.

            பண்டைய வரலாற்றில் வேட்டையின் பங்கு முக்கியமான ஒன்றாகும். ஆதி காலத்தில்  வீரத்தை நிலைநாட்டி சிங்க தமிழர்களாய் அரசகுடியாளர்கள் வேட்டை நாகரீகத்துடன் வேட்டையாடியே உணவுண்டுவந்தார்கள் நம் மூதாதையர்கள்.  நாகரீகம் மற்றும் மொழி வளர்ச்சி பெருமளவில் இல்லா முற்காலத்தில் இவர்கள் காடு, வயல், மலை, ஆழ்கடல் போன்ற பகுதியில் விலங்குகள், மீன், பறவை போன்றவற்றை வேட்டையாடி உணவுண்டும், தன்முன்னோர்களான குலதெய்வங்களுக்கு படைத்து வழிபட்டும் வாழ்ந்துவந்தனர். வேட்டையாடுவதை பாரம்பரியமாகவும், மீன்பிடித்தலை தொழிலாகவும் முத்தரையர்களில் - வலையர், பாரிவலையர், மூப்பர், அம்பலக்காரர், சேர்வை, காவல்காரர், மூப்பனார், வேட்டுவகவுண்டர் மக்கள் இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

இவர்களின் உட்பிரிவு சாதிய அடையாளமாக வேடுவர், வலையர், வேட்டைக்காரர், வேட்டுவ வலையர், வேட்டைக்கார நாயக்கர், மூப்பனார், மூப்பர், குருவிகார வலையர், கண்ணப்பகுல வலையர்  என பல பட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.  மேலும் வலையமார்கள் உலகை படைத்த சிவனுக்கே தன் கண்ணை தானமாக கொடுத்த கண்ணப்ப நாயனாரின் வழி வந்தவர்கள் என்ற பெருமையும் தனிசிறப்பாக உடையவர்கள்.


பாரி வள்ளலின் வம்சவழியினர் என்று போற்றப்படும் வலையர்கள் தன் முப்பாட்டனார் பாரி மன்னரின் புகழ் நிலைபெற்றிக்கவும், பாரியின் பெருமையை வரும் சந்ததியருக்கும், உலகிற்கும் எடுத்துறைக்கும் வகையில் வலையர் சமூகத்தின் குல தொழிலான வேட்டையாடுதலை "பாரி வேட்டை" என தங்கள் பாரம்பரியமாகவும், சில இடங்களில் ஆடி மாதம் முதல் நாளன்று    தொன்றுதொட்டு வீரமரபு நாகரீகத்துடன் வேட்டைக்குசென்று  வலையர் குல வேந்தரின் புகழ் நிலைபெறவும் வழிபாட்டை நடத்திவருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறையாவது பாரிவேட்டை செய்யவேண்டும் என்பது இவர்களின் கட்டாயமான நடைமுறையாக உள்ளது.

       பாரிவேட்டையானது பறம்புமலை சுற்றியுள்ள வலையர் நாடுகளான - ஏலூர்பத்து நாடு, மூங்கில்ககுறிச்சி நாடு, பொன்னமராவதி, வலையப்பட்டி நாடு, ஆலவயல் நாடு, தே.கல்லுபட்டி போன்ற நாட்டு பகுதிகளில் உள்ள வலையர் குடிமக்களே பாரி வேட்டை திருவிழாவை கடைபிடித்துவருகின்றனர். மேலும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் பாரி வேட்டை நடத்துகின்றனர். இப்பாரிவேட்டையை வலையர் சமுகத்தினர் மட்டுமே பெருமளவில் ஆங்காங்கே கொண்டாடுகின்றனர் என்பது பாரி மன்னரின் வலையர்குடி பெருமையை போற்றிநிற்கிறது.


'வலையமார்கள்' - பாரி வேட்டைக்கு செல்லும் முன் வலைய அம்பலநாட்டு கூட்டம் நடத்தி தன்இன மக்களுடன் அம்பலம், தலையாரி, சேர்வை, நாட்டாராக தலைமை வழிநடத்தி நல்ல நாள் பார்த்து பாரிவேட்டையின் தேதி அறிவிக்கப்படும்.பின்னர் பாரிவேட்டை அன்று குல தெய்வ வழிப்பாட்டை தொடங்கி சாமி அழைத்து மேளம், ஆட்டம் பாட்டமாக பாரிவேட்டை தொடங்கப்படும். பாரி வேட்டையின் போது தலையில் உருமா கட்டயும், கை கடியல், துப்பாக்கி, வளரி, கூரான ஈட்டி, வேல்கம்பு போன்ற ஆயுதங்களுடன் பாரிவேட்டையாடும் பாரம்பரிய வேட்டை கடைபிடிக்கப்படும்.

வளரி
வளரி- வலையர்களின் ஆயுதம்.


ஒவ்வொரு ஆயுதமும் தாங்களின் "வலையர் - முத்தரையர்" இன பிடாரி, கருப்பசாமி அய்யன், முனியாண்டி, காளி, கருப்பு, பாண்டி, மலையப்பர், அய்யனார், கண்ணப்பர், திருமங்கை ஆழ்வார் என மூதாதையரான தன் குலதெய்வங்களின் ஆயுதங்களை குறிக்கும் வகையாக கொண்டுள்ளனர். பாரி வேட்டை தொடங்கும் முன் வேட்டையாடப்படும் இடத்தில் சிறப்பு பூஜை செய்து ஆன்மிக முறையை முதல்படியாக கொண்டு முறையாக தொடங்குகின்றர். பின்னர் வேட்டையாடிய மிருங்களை வைத்து தெய்வங்களை வணங்கி அப்பகுதியை விட்டு வீடு திரும்புகின்றனர்.

பாரி வேட்டையாடி வந்தபின் பறம்புமலைக்கு தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும். ஆட்டம் பாட்டத்துடன் வேட்டை நிறைவடைந்து பறம்புமலையை பார்த்து வணங்கி வேட்டையாடி மிருங்களை பங்கு பிரிக்கின்றனர். பின் அவற்றை ஒவ்வொருவர் வீட்டிலும் தெய்வங்களுக்கு படையல் வைத்து வணங்கி பின்னரே சாப்பிடுகின்றர்.

            பாரி வேட்டை என்பது நீண்ட வரலாற்றையும், வலையர்வழி வேந்தர் பாரியின் புகழ்பாடவும், பண்டைய தொழில் முறை தெரிந்துகொள்ளவும், தெய்வ வழிப்பாட்டை கடைபிடிக்கவும் என பல கருத்துக்களின் அடிப்படையில் புணிதமாக பாரிவேட்டையை முத்தரையர் சமுகத்தினர் நடத்துகின்றனர். பாரி மன்னரின் நேரடி வம்சவழியாக 'முத்தரையர்களே' விளங்குகின்றனர்.


"பாரம்பரியம் காக்கும் முத்தரையர் குலம்"


வள்ளல் பாரி முத்தரையர்.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பாரிவள்ளல் பெயரில் இயங்கும் கல்வி அறக்கட்டளை 

வலையர் வரலாறு - Valaiyar History

முக்காலம் போற்றும் முத்தரையர் குல "வலையர்" - வலையமார்களின் வீர வரலாறு. 

( Name Meaning of Great Warriors VALAIYAR'S ).



Veera valaiyar caste
வீரம் காத்த வலையர் பெருங்குடி மக்கள்.

வலையர் வரலாறு :

              " வலையர்கள் "  தமிழ் வரலாற்றில் ஆதி அரசகுடி முத்தரையர் சமுதாயத்தின் மூத்த தலைமுறையாக சங்க இலக்கிய வரலாறுகள் கூறும் பழங்குடி மக்கள் ஆவார்கள்.  2000 வருடத்திற்கு முன்னரே வலையர் இனக்குழுவாக - ஆதி மீனவர்கள் (வலைஞர்) எனும் தொன்மையான அடையாளம் புகழுடன் திகழ்ந்த பெருமைமிகுந்த முதுதமிழர்கள் இவர்கள். தமிழினத்தின் மூத்தகுடி 'வலையர்கள்' பண்டைய பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வலையையும், வளைதடியையும் (வளரி) உருவாக்கி தம் வாழ்வியலில் பயன்படுத்திய தமிழ் முன்னோர்கள் எனும் வரலாற்று சிறப்புமிக்கவர்.

ஆதி மீனவர்களான வலையர் மக்கள் தமிழினத்தின் தொன்ம தொழில்முறை கண்டறிந்து வலையினை வடிவமைத்து முதன்முதலில் முறையே கடலிலும், வளரியை உருவாக்கி முறையே களத்திலும், போர் தரணியிலும் வீசிய தனிச்சிறப்பு வரலாற்றுப் புகழ் உடையவர்கள். இந்த பழங்குடி வீரத்தமிழர்களை பற்றி ஆயிரம் ஆயிரமாய் வரலாற்று இலக்கிய சான்றுகள் புகழ்ந்து போற்றிய பெருமைகள் தமிழ் வரலாற்றிலே பல உண்டு.

இத்தகைய தனித்தோர் சிறப்புமிக்க வரலாற்றால் வலைஞர், வலையர்-வளவர், வலைஎறியர், வளரியர், வல்லமார், வலையான், வலையமார்கள்  என்ற புகழ்பெயர்களும் பெற்று பெருமைமிக்க மூத்தகுடியாக தமிழகம் உட்பட இந்திய திருநாட்டில் பெருவாரியாக வாழ்கின்றனர்.

சங்க இலக்கியங்கள் போற்றும் வலையர் சாதிப்பட்டம் :


"முன்னை தமிழ்வேந்தருள் மூத்தவர் வலையரே - தரைதனைக் கடந்து முந்நீர் அளந்தமுத் திரையரே -பெருவலை கோல்வலை வரிவலை கொண்டு களத்தினில் சென்று கடல்தனில்மீனைப் பிடித்தோர் அவரே".


 "கடும்போர்க் களத்தினில் வளரியைச் சுழற்றி பகைவனை விரட்டியப் போர்மறவரும் அவரே".

"முத்தாய் முத்துகுளித்து ஆழ்கடல்தாண்டிய பெருவாணிகச் செல்வரும் அவரே".
                   
          என்பது முதுகுடி வலையர் பெருங்குடி மக்களின் தனித்தோர் சிறப்பு என்று 'பட்டினப்பாலை,  மதுரைக்காஞ்சி,  ஐங்குறுநாறு, பெரும்பாணாற்றுப்படை'  நூல் இலக்கியங்கள் மற்றும்  பண்டைய வரலாறுகளும் பெருமையுடன் இம்மக்களை போற்றுகிறது.

மேலும், சங்க நூல்களில் பெருமையாக வலையர் மாண்புகளின் தொகுப்பாக 
'வலைவர்- வலைஞர்- வலையார்'  இவையாவும் வலையர் என்ற சொல்மரபு வழக்கின் செய்யுள் வடிவம்  என்பதை அழகாய் சிறப்பித்து கூறப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த வரலாற்று சுவடுகள் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களில் சில, 


“கோடை நீடினும் குறைப்பட வறியாத் தோடாழ்குளத்துக் கோடுகாத்திருக்கும் கொடுமுடி ‘வலைஞர்’ ”.
- (பெரும்பாணாற்றுப்படை தொகை பாடல்).

பாடலின் பொருள் : 
கோடை நீடித்தாலும் குறையாத ஆழமுள்ள குளத்தின் கரையினிலே மீன்பிடிக்க காத்திருக்கும் வலைஞர் (வலையர்).


மதுரைக் காஞ்சியில் இருந்து, 

“வண்டிரை கொண்ட கமழ்பூம் பொய்கை கம்புட் சேவல் இன்துயில் இரிய ‘வல்லை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் “.


பாடலின் பொருள் :
வண்டுகள் தங்கிய பூமணம் பொருந்திய பொய்கையிலே படர்ந்திருக்கும் வள்ளைக்கொடியை கம்புள் சேவலின் இனிய தூக்கம் களையும்படி நீக்கிவிட்டு வலையை விரித்து கொழுத்த மீன்களை பிடித்து விற்கும் பெரும்வணிகரே வலையர்.


ஐங்குறுநூறின் அம்மூவனார் பாடிய நெய்தல் திணையில் வரும் பாடல்,

“சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர் ‘வலைவர்’ தந்த கொழுமீன் வல்சிப் பறைதடி முதுகுருகு இருக்கும் துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே”.


பாடலின் பொருள் :  தலைவனோடு காதல் கொண்ட தலைவி, பறத்தலை கைவிட்டு தம்மை விரைந்து மணம் செய்துகொள்ளுமாறு அவனிடத்தே வற்புறுத்துகிறாள்.  அதற்குச் சான்றாய் ‘கடலுக்குச் சென்று வலையைக் கொண்டு மீன் பிடிக்கும் மக்கள்,  அம்மீன்களை கரைக்கு கொண்டுவந்தவுடன் அதனை வாங்குவதற்கு பலரும் போட்டியிடுவர்’.  
அதுபோல பருவ வயதினளாகிய தம்மை மணம் முடிக்க பலரும் முயன்று வருவதாகவும், அதை உணர்ந்து தம்மை விரைந்து மணக்குமாறும் அவனிடத்தே சொல்லுகின்றாள். இதன் மூலம் ஐங்குறுநூறு இயற்றப்பட்ட காலத்திலேயே வலையர்கள் வாழ்ந்ததும்,  அவர்கள் முத்துகுளித்து மீன்பிடித் தொழிலைச் செய்ததும் தெளிவாக தெரியவருகின்றது.

Valaiyar Warriors community
Fisher/Warrior/Hunter - VALAYAR'S


ஐந்திணை பூர்வகுடி - வலையர்கள் :

               தமிழர்களின் வாழ்வியலை ஐந்திணைகளின் வரையறைக்குள் தான் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.

குறிஞ்சி  -மலையும் மலை சார்ந்த இடமும்,

முல்லை  - காடும் காடு சார்ந்த இடமும்,

பாலை  - இடைப்பட்ட மணல் நிலப்பகுதி,

மருதம்  - வயலும் வயல் சார்ந்த இடமும் (வேளாண்மை தேசம்),

நெய்தல்  - கடலும் கடல் சார்ந்த இடமும்.

                 இவற்றில் முதுகுடி முத்தரையர் இனக்குழுமமான வலையமார்கள் ஐந்திணைகளையும் தமது பூர்வ வாழ்விடமாக கொண்டிருந்தனர் என்று சங்க காலத்து வரலாறு கூறுகிறது. இம்மக்கள் முக்கிய நான்கு திணை பகுதிகளிலும் பூர்வக்குடி எனும் முதன்மை தமிழ்சமூகமாகவும் திகழ்கின்றனர்.

குறிஞ்சி நிலப்பகுதியில் - ராஜ வேட்டுவர்கள், கண்ணப்ப குல வலையர், பாரி வலையர் மற்றும் வேட்டுவ வலையர் என்றும்,

முல்லை நிலத்தில் - வலையர், ராஜ வலையர், வேட்டுவ வலையர், காவல்காரர், வேட்டைக்காரர் என்றும்,


நெய்தல் நிலப்பகுதியில் - வலையர், மீனவர், மூப்பர், பரதவர், ராஜ பரதவர், ராஜ வலையர், கரையர், தென்னவராயர், திரையர் என்றும்,

மருதம் நிலத்தில் - மூப்பர், மூப்பனார், அம்பலக்காரர், அம்பலம், முத்துராசா, சேர்வை, வலையமார், மூப்பமார், பூசாரி, பாளையக்காரர், தலையாரி என்று வேளாண்மையிலும் அரசாட்சியிலும் முதன்மையாக திகழ்ந்தனர்.


இவ்வாறு முக்கிய நான்கு திணைகளிலும் பூர்வக்குடி மக்களாக அடையாளப்பெயர்களை கொண்டிருந்தனர். அதிலும் பெருமளவில் மீன்பிடி மற்றும் வேளாண்மை, அரசாட்சி இவற்றை தமது முதன்மை குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். 
மேலும் இவர்கள் பல பகுதிகளில்  காவல்காக்கும் வீரனாக, அரசர்மரபு வழிவந்த வேந்தர்களாக தமது எல்லையில் அச்சுறுத்தும் கொடிய மிருகங்களையும், கயவர்களையும் வேட்டையாடி மக்களின் நலன்காக்கும் அரணாகவும் விளங்கினர். இதனை இன்றளவும் விழா எடுத்தும் ராஜ பாரம்பரியமாகவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

'வலையர்' வரலாற்று பெயர்காரணம் :


              "வலையர் புகழ்" :-       மனிதகுலத்தில் ஆதித்தமிழ் வேட்டுவ மரபில் தோன்றி , பழங்குடி தமிழரின் காவல் வேட்டையில் மக்கள் நலன்காக்கும்  வீரத்தை உலகிற்கு எடுத்துரைத்த முதுஅரசர்களாகவும், தமிழினத்தின் மூத்த தலைமுறை மீனவ வம்சமாக 'முத்துகுளித்தல் , வலை வீசி மீன்பிடித்து வாணிபம் செய்த முதுதமிழ் மக்களே வலையர் ஆவார். இம்மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொழில் மற்றும் வீரத்தின் அடிப்படையில் வலைஞர், வலையர் எனும் வரலாற்று சிறப்புமிக்க பெயரைக்கொண்டவர்களாக திகழ்கின்றனர்.

போர்களத்தில் வளரி, வல்லயம் மற்றும் போர்ஆயுதங்களை கொண்டு எதிரிகளை தன்வசம் வலையாய் வலைத்திழுத்து காவுண்டதால் வீரத்தின் அடையாளமாய் வலையார், வளவன்  என்றும்,
எந்நிலையிலும் அதற்மத்திற்கு வளைந்து கொடுக்காமல் சத்திரிய தர்மம் தவறாது வாழும் அரையர் கூட்டம் என்பதால் "வளையான் - வலையன்", வலையமார் என்றும் போற்றப்பட்டவர்களே  இந்த "மூத்தகுடி வலையர் மக்கள்."

தமிழின வரலாற்றிலே  2000 ஆண்டுகளுக்கு முன்பே  மூத்த சாதி மக்களாக பட்டம் கொண்டவர்கள் வலையர் மட்டுமே.   " வலையர்- வலையார்- வளையர்- வலையமான்கள் " என்று  மூத்தகுடி சாதியாக அழைக்கப்பட்ட  ஓரே தமிழ்குடி என்ற பெருமை இவர்களை அன்றி வேறு எவருக்கும் கிடையாது.
 (சான்று : சங்க இலக்கியங்கள்)

சங்ககாலத்திற்கு முன்பே தனிப்பெருமை கொண்ட முதன்மை சாதி வலையர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வலையராக திகழ்ந்தவர்கள்.
வளவன், வளையர், வலையக்காரர், வளரியர், வலையான், வலைஞன் என்பது மறுவி காலப்போக்கில் "வலையன்" என்ற அடையாளத்தோடு என்றும் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கும் தகுதியுடைய ஓரே குடியான மக்கள் "வலையரே" என்ற வீரவரலாற்று பெருமைக்குறியவர்கள்.

 (சான்று சங்க இலக்கியங்கள், குறிப்புகள் மற்றும் செப்பேடுகள்).

தொழில் முறை:-  மீன்பிடித்தல் (முத்துகுளித்தல்), அரசாளுதல், போர்புரிதல், வேளாண்மை, நீதி அதிகாரி, பூசாரி, ராஜகுலத்தின் காவல் வேட்டையாடுதல்.


வலையமார்களின் தனிச்சிறப்பு:

               வலையர் எனும் முதுகுடி மக்கள் பண்டைய காலம் முதல் ஆதித்தொழிலாக முத்துகுளித்து மின்பிடித்தல், வளரி ஆயுதம் கண்டு போர்புரிதல், போர்களில் சத்ரியவேட்டை, மிருக வேட்டை போன்றவற்றை வேட்டையாடி தமிழரின் வீரத்தை உலகிற்கு கற்றுதந்தவர்கள். ராஜ வேட்டை பண்பாட்டிலும், காவல் வீரத்திலும் வேட்டையாடுவதை தம்குல காவல்கார தெய்வங்களுக்கு படைத்து வழிபட்டும் வந்துள்ளனர். மேலும் வேட்டையையும், தெய்வ வழிப்பாட்டையும் அடிப்படையாக கொண்டவர்கள் வலையர்கள் என்பதற்கு சான்றாக வலையர் குலத்தில் பிறந்த திண்ணன் என்னும் கண்ணப்ப நாயனார் திகழ்கிறார். "கண்ணப்பகுல வலையர்" என்ற பட்டத்திலும் முத்தரையர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

சிவனுக்கே கண்கொடுத்த வம்சம் என்ற பெருமையும் வலையர் மக்களுக்கே..! ஆயுதம் தரித்து போர்களத்தில் வளரி , வேல்கம்பு எரிந்து வளரியான் என்று காவல்காரனாய் போற்றப்பட்டதும் இந்த வீர வலையர்களே...!


Kannapa Nayanar VALAYAR.
முத்தரையர்- வலையர்குல கடவுள் கண்ணப்ப நாயனார்.

          "வலையர்" குலத்தினர் வேட்டை, தெய்வ வழிபாடு, அரசாட்சி நடத்துவது என அனைத்திலும் திறமை பெற்றவர்களாவார். அதன் அடிப்படையில் இவர்களின் அப்போதைய வீர செயல்களுக்கு ஏற்பவும், இடத்திற்க்கு ஏற்ப  பட்டபெயரிட்டு உலகம் முழுவதும் பரவி கடல் போல வாழ்ந்து வருகின்றனர். "வலையர்" என்ற சாதிய பட்டத்திலேயே தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட 12 மாவட்டங்களில் பெரும்பாண்மையாக வாழ்ந்து வருகின்றனர் இந்த மன்னர்குல மாணிக்கங்கள்.

பண்டைய காலத்திலே வலையர் குல மன்னர்களில் பரம்பு மலையை தலைமையாக கொண்டு பாரி வள்ளல் மன்னரும்,  கொல்லிமலையை வள்ளல் வல்வில் ஓரி போன்ற  மன்னர்கள் சிறந்த ஆட்சி நடத்தி கொடை வள்ளல்களாக புகழ்பெற்றார்கள்.

மேலும் முத்தரைய வலையர் குலத்தில் பிறந்த கரிகால் சோழன் மரபினராக மக்கள் நலன்காத்து, பிற்கால சோழர்கள்  என புதிய அடையாளத்துடன் ஆட்சி செய்தனர்.
 ஆறாம் நூற்றாண்டுகளில் முத்தரையர்மூத்த அரையர் என்று அடையாளப்படுதினர்.
அதன் பின் பாளையக்காரராகவும், ஜமீன், மிராஸ், அம்பலகாரர், அம்பலம், மூப்பனார், மூப்பர், சோழ மூப்பர், பஞ்சாயத்து நாட்டார் (நாட்டாண்மை), காவல்காரர், சேர்வை, பூசாரி போன்று வருடங்கள் மாற மாற புதிய புதிய வரலாறுகளையும் படைத்து அதற்கேற்ப பெருமைமிகு பட்ட பெயர்களில் அழைக்கப்பட்டனர்.

" காடையான் குல வலையன் குறிச்சேந்தன் ஆன பெரியநாட்டு முத்தரையன் ". -  (தமிழக வரலாற்று களஞ்சியம்).


Hunter /Fisher Community


வலையர் நாடு (தென்சீமை):

     
            பண்டைய வரலாற்றுப்படி வலையர் நாடு எல்லைகளாக  சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் உள்ளடங்குகிறது. அதிலும் ஏலூர்பத்து நாடு முக்கியமாக குறிப்பிடதக்கது. இந்த நாடு முத்தரையர் இன மக்களின் பழையநாடாகும். இந்த நாடு சிவகங்கை மாவட்டத்தில் பொன்னமாராவதிக்கும், சிங்கம்புணரிக்கும் அருகே அமைந்துள்ளது.

ஏலூர்பத்து நாட்டுக்கு கட்டுப்பட்ட உட்கிராமங்கள்,

1)  மதகுப்பட்டி (தாய் கிராமம்) *கீழதெரு *மேலத்தெரு *சலுகைபுரம்.
2)  ஆழவிளாம்பட்டி.
3)  கோட்டுத்துறைப்பட்டி.
4)  சிலந்தகுடி.
5)  அலைவமுத்துப்பட்டி.
6)  அம்மைச்சிப்பட்டி.
7)  தேத்தாம்பட்டி.
8)  பேரனிப்பட்டி.
9)  வீரப்பட்டி.
10) வலையராதினிப்பட்டி.
11) திருமன்பட்டி.
12) வில்லடிபட்டி.
13) அலங்கம்பட்டி.
14) பிரான்மலை (பறம்புமலை பாரியின் தலைமையிடம்).
15) கொடுங்குன்றம்பட்டி.
16) நீலத்துநல்லூர்
   இவ்வூர்களை உள்ளடங்க கொண்டவையே ஏலூர்பத்து நாடாகும்.  இந்த நாட்டில் முழுக்க முழுக்க முத்தரையர் மக்கள் பெருமளவில் வாழகூடியதும், வலையர் மரபு மக்களின் ஆளுமை ஆட்சி அன்று முதல் இன்றவும் இப்பகுதிகள் முத்தரையர் மக்களில் கட்டுபாட்டிலே உள்ளது என்பது இந்நாட்டின் தனிசிறப்பு.

மேலும் ராமன் வகையாரா, சுப்பன் வகையாரா, கருப்பன், மலையன் வகையரா, நாச்சியார் வகையரா போன்று தம்இன முன்னோர்களின் வகையறா குலவழியினை அடையாளப்படுத்தி இன்றவும் கோவில் வழிபாடுகளை பின்பற்றி வருகின்றனர். பச்சை நாச்சி அம்மன், அழகு நாச்சி அம்மன், பொன்னழகி அம்மன், சப்தமார்கள், பிடாரி, மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்களையே குலதெய்வமாக வணங்கி வழிப்பட்டு வருகின்றனர்.

முத்தரையர் குல சாமிகள்
முத்தரையர் மக்களின் குலசாமிகள்.

முத்தரையர்குல கடவுள்கள்


வளரி வீசிய வீர வலையர்கள் : (கி.பி. 11 நூற்றாண்டு)

வலையர் கண்டெடுத்த வளரி.
         தமிழர் வரலாற்றில் முதன்மையான பெருமைக்குறிய சான்றாக வளரி வீசிய வீர வலையர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை காண அவரின் மதி அமைச்சர் (அ) சேனாதிபதியாக இருக்கும் சிம்ம பெரும்பிடுகு முத்தரையர் (இவர் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன்மாறன் (705-745) முத்தரையர் அல்ல) தம் குலத் தோன்றல் வீரமல்லனை அழைத்து செல்கிறார்.

 மூவரும் சந்திப்புக்கு பிறகு மேல் மாடத்திற்க்கு சென்றார்கள், மாடத்தின் பின் பகுதிக்கு அப்பால் வைகை நதி சோம்பலுடன் தவழ்வது தெரிந்தது. கூட்டங்கூட்டமாக வானத்தில் செங்கால் நாரைகள் பறந்து சென்றன.

"உனக்கு நன்றாக வளை எறி வீசத் தெரியுமென்று முத்தரையர் சொல்கிறாரே, இந்த நாரைகளில் ஒன்றை வீசி வீழ்த்துவாயா வீரமல்லா..?" என்றார் பாண்டியர்.

பெரும்பிடுகு முத்தரையர் விரைந்து சென்று, ஒரு வளை எறியைக் (வளரி) கொண்டு வந்து வீரமல்லனிடம் நீட்டினார். வளை எறியை கையில் பிடித்தவுடன் வீரமல்லன் வேறு மனிதனாகி முழு போர்குடி வேட்டையராக மாறி விட்டான்.

"முதல் நாரையா ! இடையில் உள்ளவற்றில் ஒன்றா ! கடைசியில் பறப்பதா?"

சுந்தரபாண்டியர் திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினார். வீரமல்லன் தன் விழிகளை இடுக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டே, "சொல்லுங்கள் மன்னா?" என்று துடித்தான்.

"முதல் நாரை!" என்றார் பாண்டியர். பத்துப் பதினைந்து பறவைகளில் ஏதாவதொன்றை வீழ்த்துவதென்றாலே எவ்வளவு கடினம் என்பதை அறிந்தவர்.

வீரமல்லன் சுழற்றிவிட்ட சின்னஞ்சிறு வளை எறி விர்ரென்று மேலே வட்டமிட்டுச் சென்றது. அது புறப்பட்டது ஒரு திசை, திரும்பியது மற்றொரு திசை. மூன்றாவது திசையில் பறந்துகொண்டிருந்த முதல் நாரை தலைகுப்புறக் கீழே விழுந்து கொண்டிருந்தது.

சுந்தரபாண்டியர் தமது செருக்கையும் மறந்து, "முத்தரையரே ! வீர மல்லன் -  வல்லவன் தான்" என்று பெருமிதத்துடன் வாய்விட்டுக் கூறினார். 
//ஆதாரம் : வேங்கையின் மைந்தன் நாவல் மற்றும் ராஜேந்திர சோழன் வரலாறு).//


வளரி - VALARIE


Veera mallan Mutharaiyar
வீரமல்லன் முத்தரையர்

இவ்வாறு வளை எறியில் வல்லவர்கள்தான் இன்றைய "வளையர்கள்". தமிழின் வழக்கமான 'ளகரத்திற்க்கு' பதிலாக 'லகரம்' என்று மாற்றி இவர்களை "வலையர்கள்" ஆக்கிவிட்டார்கள், இது ஏதோ தற்செயலாக நடந்திருக்கும் என்று சொல்வதற்க்கு இல்லை. 
இதுவும் தமிழ்குடி வளையர்களுக்கு எதிரான வரலாற்று இரட்டிப்பு பணிகளில் ஒன்றுதான். அப்படியானால் நமக்கு எதிரிகள் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் தொடர்கிறார்கள் என்பதனை நாம் அறிய வேண்டும். அதனால் நமது பெருமையோ, நமது வீரமோ குறைந்து விடுமா என்ன ? "வளையர்" என்று அழைத்தாலும், ஆதிவேட்டுவர் மட்டும் மீன்பிடி முன்னவர்களாக "வலையர்" என்று அழைத்தாலும் நமது பெயர் காரணம் ஒன்றே.!!

இன்று பிற இனம், பிற சாதியை சார்ந்தவர்களுக்கு "வீர வலையர்" மக்களின் பட்டபெருமை தெரியாமல் இருப்பது எனபது கூட இங்கு பிரச்சனையில்லை, அதே வீரக்குடியில் பிறந்து பிறப்பின் பெருமை அறியாமல் இருக்க முடியுமா ? வளை எறியில் வல்லவர்களான "வலையர் குலத்தவரை" பிற சமூகத்தவர் அறியாமையால் தன் இனஇழிவு மறைக்க அரசகுடி வீரமரபு வலையர்களை பரிகசிக்கும் நோக்கில் (வேறு அர்த்தங்கள் தொனிக்க) "வலையர்" என்று அழைக்கும் போது நாம் நம்முடைய அறியாமையால் துவண்டு போவது சரிதானா ?. 

இனி சில தகுதியற்ற மூடர்கள் வலையர்களை சிறுமை படுத்துவதாக எண்ணி யாரேனும் ஒருமையில் தவறான முறையில் அழைத்தால் நாம் நெஞ்சம் நிமிர்த்தி பெருமிதத்தோடு சொன்னவரை நோக்கி நமது பெயருக்கான காரணத்தைச் சொல்லி தகுதியற்ற மாற்றுஇன இழிபிறவி அவனை சிறுமைப் படுத்துங்கள்.

வலையர் புகழ் பட்டம்
சருகுமான் வேட்டையில் பெயர்கண்ட வலையர்.

மேலும் "கங்கை கொண்டான்" என்று பெருமிதப் படுத்தப்படும் ராஜேந்திர சோழன், கங்கை கரைக்கே செல்லவில்லை...! அவனுக்காக கங்கை வரை பெரும்படை எடுத்து கங்கை நீரை கொண்டு வந்தது முத்தரையர் குலக் கொழுந்து சோழப் பேரரசின் வடப் பகுதி மாதண்ட நாயகர், கண்டோர் நடுங்கும் காலன், பகைவர்களை பதற வைக்கும் பலபீமன் அரையன் ராஜராஜன், அவருடைய பெரும்படைதான் கங்கை வரை சென்று ராஜேந்திர சோழனுக்கு "கங்கை கொண்டான்" என்ற பெயர் வரவும், தஞ்சைக்கு மாற்றாக புதிதாக "சோழர்கள்" நிர்மானித்த "கங்கை கொண்ட சோழப்புரம்" என்ற புதிய தலை நகருக்கு அந்த பெயர் வரவும் காரணமாக இருந்தார்.

அரையன் - ராஜராஜன் முத்தரையனின் போர்படை வீரர்களும் அவர்தம் குடும்பமும், காஞ்சிபுரத்தில் இருந்து "சோழப்பேரரசுக்கு" பாதுகாவல் செய்து அங்கேயே தங்கி இருக்க முடியும் என்பதுதான் இதன் மூலம் நாம் அறியக் கூடிய செய்தியாக இருக்கிறது. நாவலாக இருந்தாலும் நமது பெருமை உலகறிய செய்த "அகிலனுக்கு" நாம் கடமைப்பட்டவர்களாகிறோம்.

Great VALAIYAR Warriors

"வலையர்" என்ற கர்வத்தோடு..  பல பகுதிகளில் மாற்றார்களை அரவணைத்தும், ஆதிக்க சாதியாகவும் முத்தரையர் என்ற மன்னர்குல தராதரத்தில் ஓங்கி வீரத்துடன் வாழ்கின்றனர் இந்த தமிழ்குடி மக்கள்.

இன்றும் வலையர் என்று கூறுவதில் ஒட்டுமொத்த முத்தரையரும் பெருமையடைகிறோம். என் மூத்தசாதி மக்களை போற்றும் வகையில் "வலையர்- வலபயலுக" என்பதில் அம்பலம், அம்பலக்காரர், சேர்வை, சேர்வைகாரர், மூப்பனார், முத்துராஜா, வழுவாடிதேவர், மூப்பர், தலையாரி, தனஞ்சயராயர்  மற்றும் ஒட்டுமொத்த முத்தரையர்களும் பெருமைகொள்கிறோம்...!!
       

        வாழ்க வீர வலையரின் சரித்திர புகழ்..!



நன்றி :
தமிழக வரலாற்று துறை, முத்தரையர் வரலாற்று புத்தகங்கள் மற்றும் பொன்னியின் செல்வன் - 'வேங்கையின் மைந்தன்' நாவல்.


வளரி - Valarie
வலையர் உருவாக்கி பயன்படுத்திய பண்டைய ஆயுதம் - வளரி (வல்லயம்).


Ambalakkarar caste
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே முத்தரையர்கள் பல பட்டம் பூண்டது.


Friday, July 3, 2020

முத்தரையர் அரசாணை(நிலை) எண், 15 (29 உட்பிரிவுகள்)

முத்தரையர்களும் அரசாணையும்

தமிழ்நாடு அரசு ஆணை எண்.15.நாள்.22.02.2006.கீழ்வரும்..உட்பிரிவுகள் அனைத்தையும்....ஒன்றாக சேர்த்து முத்தரையர் என அழைக்கலாம்.....என்று ஆணை வெளியிட்டுள்ளது.....

1. முத்துராஜா 
2.முத்திரியர் 
3.அம்பலக்காரர் 
4.சேர்வை 
5.சேர்வைக்காரர் 
6.வலையர் 
7.கன்னபகுல வலையர் 
8.பரதவ வலையர் 
9.பாளையக்காரர் 
10.காவல்காரர் 
11.தலையாரி 
12.வழுவடியர் 
13.பூசாரி 
14.முதிராஜ் 
15.முத்திரிய மூப்பர் 
16.முத்திரிய மூப்பனார் 
17.முத்திரிய நாயடு 
18.முத்திரிய நாயக்கர் 
19.பாளையகார நாயடு 
20.பாளையகார நாயக்கர் 
21.முத்துராஜா நாயடு 
22.வன்னியகுல முத்துராஜா 
23.முத்துரிய ஊராளி கவுண்டர் 
24.முத்துரிய ராவ் 
25.வேட்டுவ வலையர் 
26.குருவிகார வலையர் 
27.அரையர் 
28.அம்பலம் 
29.பிள்ளை

Wednesday, July 1, 2020

கண்ணப்பநாயனார் ( வேடர்குல இறைவன்)

கண்ணப்ப நாயனார்.......

பொத்தப்பி நாட்டிலுள்ள, உடுப்பூர் எனும் ஊரில் பிறந்தவர் கண்ணப்பர். இவரது இயற்பெயர் திண்ணர். சிவபெருமானுக்கு தன் கண்ணை அறிந்து அளித்ததால் கண்ணப்பர் எனும் நாமம் நிலைபெற்றுவிட்டது. சுந்தரமூர்த்தி நாயன்மாரால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்" என்றும், பட்டினத்தாரால் "நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்" என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன், கண்ணப்பன், வேடன் என்றும் பலவாறாகச் சான்றோர்கள் பலரால் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார்.

பொத்தப்பி நாடு என்பது இன்றைய ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராக உள்ளது.கண்ணப்பர் பிறந்த உடுப்பூர் எனும் ஊர் குண்டக்கல் - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது.

கண்ணப்பர் குன்றுவர் எனும் வேடர்குலத்தில் தோன்றியவர், இவரது பூசைநாள் :தை மிருகசீரிசம்.அவர் பிறந்த உடுப்பூர் மிகுந்த வளம் பொருந்திய குறிஞ்சிநிலம்.காட்டுப்பன்றிகளும், யானைகளும், புலி,கரடி,மான்,காட்டுப்பசு போன்ற ஏகப்பட்ட விலங்கினங்கள் வாழ்ந்தன.  அம்மலை முழுவதும் 'கொல்','எறி','குத்து' என்ற வேடர்களின் ஒலி ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஆநிரை கள்வர்கள் கவர்ந்துவந்த பசுக்களும் மலைமுழுவதும் நிறைந்திருக்கும். இக்குன்றுவர் கூட்டத்தின் தலைவன் நாகன் என்பவர், இவருடைய மனைவி தத்தை என்பவள். 
பிள்ளைப்பேறு இல்லாமல் தம்பதியினர் தவித்து வந்தனர். பிள்ளைவரம் வேண்டி முருகவேளின் கோவிலுக்கு தினமும் சென்று, சேவலையும், மயிலையும் காணிக்கையாய் தந்து, புகழ் அமைந்த குரவைக்கூத்து ஆடி, பெரிய அணங்காடல் செய்வித்து பெருவிழா எடுத்தனர். இறைவன் கருணையால் கண்ணப்பர் பிறந்தார். வேடர்கூட்டமே திருவிழாபோல் கொண்டாடாடியது. குல வழக்கப்படி மணங்கமழும் இளந்தளிர்களை சூட்டினர், மணிக்கோவை எனும் அணியை இடுப்பில் கட்டினர். இளம்பருவமும் வந்தது, வீரம் மட்டுமல்ல கருணையிலும், குறும்புத்தனத்திலும் சிறந்து விளங்கினார். புலிக்குட்டி காட்டுப்பன்றி, முயல் ஆகியவற்றை பின்தொடர்ந்து பிடித்து அதனை வீட்டின் முன்புகட்டி வளர்த்து வருவார். வேடர்தலைவன் நாகன் தன் மகனுக்கு போர்க்கலையான விற்பயிற்சி கற்றுகொடுத்தார். அத்துடன் அதனோடு தொடர்புடைய ஏனைய கலைகளையும் கற்றுத்தேர்ந்தார் கண்ணப்பர். வேடர்குழுவாய் வில்வேட்டையாட பருவ இடைவெளியில் செல்வர், அவ்வாறே செல்ல முற்படையில் நாகன் தலைமையேற்று செல்வார், வயதுமூப்பின்காரணமாய் இம்முறை கண்ணப்பரை தலைமையேற்று போகச்சொன்னார். அவ்வூரில் தேவராட்டி எனும் குறத்தி வாழ்ந்து வந்தாள். அவளிடம் குறிகேட்டுத்தான் செல்வர் வேட்டைக்கு. அன்று புதிதாக கண்ணப்பர் தலைமையில் செல்வதனால் அனைவரும் குறிகேட்டனர். தேவராட்டி கண்ணப்பரை கண்டு உன்தந்தையின் தந்தையை விட வலிமைமிக்கவன் நீ! நீயே இனி இக்கூட்டத்தை வழிநடத்துவாய் எனகூறி திலகமிட்டு அக்குழுவை அனுப்பினாள். 

தன் உற்றநண்பர்கள் நாணன்,காடன் மற்றும் குன்றவர் குழுவினருடன் வேட்டைக்கு சென்றார். வேட்டைக்காக கன்னிவைத்து வலைவிரித்து வைப்பர். பல விலங்குககள் பொறியில் சிக்கியது.
அந்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் ஓடியது. விடாது துரத்திச் சென்று, புதருள் மறைந்த அந்தப்பன்றியைத் கண்ணப்பர் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதனைக் கண்ட நண்பர்கள் வியந்து, திண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள். அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் கண்ணப்பர்.

[ முன்பு செய் தவத்தின் ஈட்டம் 
  முடிவிலா இன்பம் ஆன 
அன்பினை எடுத்துக் காட்ட 
  அளவிலா ஆர்வம் பொங்கி 
மன் பெரும் காதல் கூர 
  வள்ளலார் மலையை நோக்கி 
என்பு நெக்கு உருகி உள்ளத்து 
  எழு பெரு வேட்கை யோடும்]

முன்புசெய்த தவத்தினால் உண்டான அன்பு அளவில்லாமல் பெருகி பெருங்காதலாகி சிவபெருமான் எழுந்தெருளியுள்ள மலையைநோக்கி பேராசையுடன் மலையைநோக்கி சென்றார். கடினமான அந்தமலையில் ஏறி ஏகநாயகரான சிவனை கண்ணில் கண்டார். சிவபெருமானை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து தழுவினார். நீண்டநேரம் உச்சிமுகிர்ந்தார். உடற்மயிர் சிலிர்த்தது. கொடிய வனவிலங்குகள் திரியும் இக்காட்டில் நீவிர் தனியாய் இருப்பதா என மனம் வருந்தினார். 
ஈசனாரின் முன் பச்சிலையும், பூவும் படைக்கப்பட்டு இருந்தது. இந்நற்செயலை யார் செய்திருப்பார்? என கண்ணப்பர் வினவ, 

நாணனோ நான் கண்டுள்ளேன் நண்பா! என மறுமொழியளித்தான். வலிய உம்தந்தையுடன் வேட்டையாட இப்பகுதிக்கு வந்தோம் அப்போது ஒரு பார்ப்பனர் குளிர்ந்தநீரால் இவரை நீராட்டி இலையும், பூவும் சூடினார் என கூறினான்.ஆகவே அவரே இதனை செய்திருக்க வேண்டும் என்றான். 
இறைவனுக்கு இவைதான் விருப்பம்போலும் என கண்ணப்பன் நினைத்தார். ஆயினும் அவரை அங்குவிட்டு செல்ல மனம் ஒப்பவில்லை, அவருக்கு உணவுபடைக்க விரும்பினார்.

நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப் படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார், மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார். பின் இறைவனின் முடிமீதிருந்த மலர்களை தம்காலால் துடைத்தெரிந்தார்.குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும், அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு மகிழ்ந்தார் திண்ணனார். பின் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலையில் இறைவனுக்கு திருவமுது தேடி வரப் புறப்பட்டார். மறுநாள் காலை சிவகோசரியார் இறைவனை காண வந்தார்.

[வந்து திருமலையின் கண் 
  வானவர் நாயகர் மருங்கு 
சிந்தை நியமத்தோடும் செல் 
  கின்றார் திரு முன்பு 
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு 
  அகல மிதித்து ஓடி 
இந்த அனுசிதம் கெட்டேன் யார் 
  செய்தார் என்று அழிவார்]
வெந்த இறைச்சியும், எலும்பும் இறைவன் முன் கிடக்க, அதைக்கண்டதும் தொலைவில் ஓடி! ஓ கெட்டேன் இப்பாதகத்தை செய்தவன் யார்? என நினைத்து வருந்தினார்.பின் அவற்றை துடைப்பம் கொண்டு சுத்தப்படுத்தினார். பின் திருமுகலி ஆற்றிற்கு சென்று நீராடினார்.
சிவ கோசரியார் வருத்தத்துடன்  இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான் தோன்றி கண்ணப்பரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்று கூறி மறைந்தருளினார்.
அவ்வாறே சிவகோசாரியாரும் தம் படையலை படைத்துவிட்டு மறைந்துநின்று பார்க்கலானார்.

கண்ணணாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார், செய்வதறியாமல் திகைத்தார். பின் தம் கைகளால் துடைத்தாலும் பச்சிலை இட்டாலும் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது "ஊனுக்கு ஊன்"என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே தம் வலக்கண்ணை அம்பினால் அகழ்ந்து எடுத்து அப்பினார். உதிரம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார்.தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்றுவிடும் என்று உணர்ந்தார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். உடனே காளத்தி நாதர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார்

[கானவர் பெருமானார் தங்கண் 
  இடந்து அப்பும் போதும் 
ஊனமும் உகந்த ஐயர் உற்று 
  முன் பிடிக்கும் போதும் 
ஞான மாமுனிவர் கண்டார் 
  நான்முகன் முதலாய் உள்ள 
வானவர் வளர் பூ மாரி 
  பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப]

கண்ணப்பர் தம் கண்ணைத் தோண்டி இறைவன் கண்ணில் அப்பியபோதும், அவர் ஊட்டிய ஊன் உணவை விரும்பியேற்ற இறைவன் இடக்கண்ணைத்தோண்ட முற்படுகையில் தன்கையை கொண்டுதடுத்த நிகழ்வை கண்டார் சிவகோசாரியார் அப்போது வேதங்கள் ஒலிக்க, நான்முகன் முதலிய தேவர்கள் பூமாலை பொழிந்தனர்.
இணையற்றவனே இனிநீ என் வலப்பக்கத்தில் இருப்பாயாக!என திருவருள் வழங்கினார்.

சிற்பங்கள் : தஞ்சை, தாராசுரம்

சுதந்திர போராட்ட தியாகி VKA ஆதினமிளகி அம்பலம்

பெயர் : VKA ஆதினமிளகி அம்பலம் ஊர் : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சருகுவலையப்பட்டி தேசப்பணிகள் : 🟠1943 வெள்ளையனே வெளியேறு போராட்...